முந்தைய மதுரை மாவட்டம் இன்றைய திண்டுக்கல் மாவட்டம் குருவன்வலசு (கடத்தூர்) கிராமத்தில் பன்னெடுங்காலமாக வசித்து வரும் திருவள்ளுவ நாயனார் சமூகத்தைச் சார்ந்த மக்களின் ஐவகை குலத்தினர் அருள்மிகு ஆனந்தாயி அம்மனை குலதெய்வமாக தொன்று தொட்டு வழிபட்டு வருகிறார்கள்.
இந்த ஆனந்தாயி அம்மன், பன்னெடுங்காலத்திற்கு முன்பு திருவள்ளுவநாயனார் சமூகத்தில் பிறந்த குழந்தையாவாள்.
ஒருசமயம் இந்தப் பெண் குழந்தை ஆற்றங்கரை ஓரத்திலே விளையாடிக் கொண்டிருந்த போது ஆற்றுப் பெருவெள்ளம் வந்ததால், வெள்ளத்தில் மாயமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. பல நாட்கள் கழித்து அந்த கன்னிப் பெண் இக்குல மக்களின் கனவில் தோன்றி, தான் அதே ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தாழை மடலுக்கு (Pandanus Fascicularis / Screw Pine Tree / Fragrant Screw Pine) அடியில் சக்தி வடிவாக உருக்கொண்டு, சக்தி சொரூபமாகவும், அகிலமெல்லாம் ஆளும் அப்பன் ஈசனுக்கு இடப்பாகத்தில் அமர்ந்த அன்னை பராசக்தியின் குழந்தை வடிவமாகவும், சப்த கன்னிகளில் இளைய கன்னியாகவும், தான் அந்த இடத்தில் குடி கொண்டு இருப்பதாகவும், தனக்கு காதோலை - கருகமணி, தாழை மடல், மல்லிகை பூ, முல்லைப் பூ, மரிக்கொழுந்து மற்றும் பச்சைப் பட்டாடை சமர்ப்பித்து, தென்னை கீற்றில் பச்சை பந்தலிட்டு வழிபட்டு வாருங்கள் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
அன்று முதல், இச்சமூகத்தின் ஐந்து வகை குல மக்கள் தங்களின் குல முன்னோர்களில் ஒருவராகவும், குழந்தை வடிவாகவும், ஏழு கன்னிகளில் இளைய கன்னியாகவும் விளங்கக்கூடிய இந்த கன்னித்தாயை தங்களின் குலதெய்வமாகக் கொண்டு தொன்று தொட்டு அருள்மிகு ஆனந்தாயி அம்மன் என்ற பெயரிலே வழிபட்டு வருகிறார்கள்..!
ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று அனைத்து உறவுகளும் ஒன்றுகூடி கோலாகமான திருவிழா நடத்தப்படுகிறது!
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று மதியம் 12:00 மணிக்கு உச்சி பூஜையும் அன்னதானமும் நடைபெறுகிறது!
நம் உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க காதுகுத்து முதலிய அனைத்து விதமான பூஜைகள் மற்றும் வழிபாடுகளும் சிறப்பாக நடத்திக் கொடுக்கப்படும்!
அருள்மிகு ஆனந்தாயி அம்மன் திருக்கோவில்,
அமராவதி ஆற்றுப்பாலம்,
கடத்தூர் ரோடு,
கணியூர்,
தமிழ்நாடு - 642203
📞 +91 86810 62400, +91 83444 72910, +91 63743 43063.